top of page
வெற்றிக்களிறு, Vetri Kaliru

வெற்றிக்களிறு

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1510
₹200.00 Regular Price
₹186.00Sale Price

ஆசிரியர்: அபிராமி பாஸ்கரன்    

வகை: நாவல், சரித்திர நாவல்கள்    

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்     

பக்கங்கள்: 304     

மொழி: தமிழ்     

 

வெற்றிக்களிறு, Vetri Kaliru, அபிராமி பாஸ்கரன், Abirami Baskaran Books, நாவல், சரித்திர நாவல்கள், Novel, Sarithira Novelgal, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    நம்மைப் போல கல்கி ஐயாவின் எழுத்தில் மயங்கித் திளைத்த எழுத்தாளர் தான் அபிராமி பாஸ்கரன். அவரின் முதல் ஆக்கம் இது. கொப்பத்துப் போர் பற்றிய கல்வெட்டுப் பதிவைப் படித்து அதிலிருந்து தான் இந்த நூலை ஆக்க எத்தனித்தார் அவர். இராஜதிராஜ சோழர் காலத்தில் நடக்கும் கதை இது. அவரே முக்கிய கதாபாத்திரம். இரண்டாம் இராஜேந்திர சோழர், பெரிய பல்லவர் என அறியப்படும் பல்லவராசன் என்போரும் முக்கிய கதாபாத்திரங்கள். பல்லவராசன் யார் தெரியுமா? பிற்காலத்தில் கருணாகரத் தொண்டைமான் என கலிங்கத்துப்பரணியில் வலம் வரப்போகிறவனின் தமையன் அவர். ஏன். குலோத்துங்கச் சோழன் எனப் பிற்காலத்தில் புகழ் பெறப் போகும் விஷ்ணுவர்தனும் வலம் வருகிறார் இக்கதையில். கீழைச் சாளுக்கியத்தை அச்சுறுத்தும் ஆகமவல்லனின் மேலைச் சாளுக்கியத்தை சோழர்கள் போரில் சந்திக்கும் கதை தான் இந்நூலின் மையம். சிறப்பாக எந்தவொரு தொய்வில்லாமல் செல்கிறது கதை. ஒற்றர்கள், ரகசியங்கள், சூழ்ச்சிகள், சதித் திட்டங்கள் எனப் பல கோணங்களில் பயணிக்கிறது கதை. பெரிய பல்லவனின் காதல் கதையும் நன்று. அவர் காதலிக்கும் கார்குழல் நங்கையின் காட்சிகளும் அழகானவை. சதுரங்க வல்லபன், உடையத்தேவர் என பிற சுவாரசியமான நபர்களும் உண்டு கதையில். ஆனை மேல் துஞ்சிய தேவர் என்றழைக்கப் படும் இராஜாதித்தரைப் போலவே ஆனை மேல் மாள்கிறார் இராஜாதிராஜர். என்ன வீர வரலாற்றுக் கதை அவரின் கதை. அபாரம்! அபிராமி பாஸ்கரனை பாராட்ட வேண்டும். முதல் முயற்சியே வெற்றிகரமாக அமைந்ததற்கு அவரின் எழுத்துத் திறமை தான் காரணம். சோழ வரலாற்று நாவல் என்றாலே இராசராச சோழர் அல்லது இராசேந்திர சோழர் பற்றித் தான் வரும். இது அவர்களின் காலத்திற்குப் பிறகு வந்த சோழ மன்னர்களின் காலத்தில் நடக்கும் கதை. இந்நூல் பாராட்டப் படவேண்டிய ஒன்று. படித்து மகிழுங்கள். அபிராமி பாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்! சில இடங்களில் அடிக்குறிப்புக்களை இட்டு வாசகர் அனுபவத்தை இலகாக்கியதற்கு எனது நன்றிகள். ஆனை மேல் துஞ்சிய இரண்டாவது தேவருக்கு எனது வணக்கங்களும் மரியாதையும்!

    - Dhibendran Selvarajah (Dean, goodreads)

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page