சூதாடி, மதகுரு, நிலவளம், soothaadi, mathaguru, nilavalam
ஆசிரியர்: ஸெல்மா லாகர்லெவ், நட்ஹாம்சன், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, க. நா. சு., ரா. கிருஷ்ணய்யா
வகை: நாவல், மொழிபெயர்ப்பு, கிளாசிக்ஸ்
தமிழில்: க.நா.சுப்ரமண்யம்;ரா.கிருஷ்ணய்யா
பதிப்பகத்தார்: நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 1152
மொழி: தமிழ்
சூதாடி, soothaadi, மதகுரு, mathaguru, நிலவளம், nilavalam, ஸெல்மா லாகர்லெவ், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, க. நா. சு., ரா. கிருஷ்ணய்யா, க.நா.சுப்ரமண்யம், கிளாசிக்ஸ், நாவல், மொழிபெயர்ப்பு, Aaivu Nool, நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
மதகுரு
ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் 'மதகுரு' கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்கு அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய வாழ்வு குறித்த அவருடைய பாட்டியார் கூறியவற்றிலிருந்து, கிளைத்தவையாகும். 1909-ல் இவர் நோபல் பரிசு பெற்றார். பின் ஸ்வீடிவ் அக்காடமியும் இவரை உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அரசியல் பற்றியோ, மதம் பற்றியோ தீவிரமான அபிப்ராயங்கள் சொல்லாமல், பெண் எழுத்தாளர்களின் பட்டுக்கொள்ளாத ஜாக்கிரதையுடன் வாழ்ந்தார். 1940-ல் காலமானர்.
'மதகுரு’ விவலிய நூல் போல் மேலிட்ட எளிமையும், உள்ளே ஆழமும் கொண்டது. நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் ஆகியவற்றின் சூழல் நிறைந்தது. அவர் காலத்தைத் தாண்டிய ஒரு சுதந்திர உலகம் அது.
நிலவளம்
The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில் எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனும் பருவ காலங்களுடனும் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தான்? என்ன விளைவித்தான்? காட்டை ஒரே நாளில் சீராக்கிவிட முடியாது. பல ஆண்டுகள் கடின உழைப்பு தேவை. அதற்கு பக்க பலமாக இருக்கும் பெண் வரும்போது அவன் வாழ்க்கை எப்படி மலர்கிறது, அப்போதைய வாழ்க்கை முறை (பெண்களுக்கு ஓட்டுரிமை எல்லாம் இல்லாத காலகட்டம்) அப்போது ஆண் பெண் உறவு நிலை, அவர்களின் உணர்வுகள் எல்லாம் இன்றைய காலகட்டத்துடன் பொருந்தி போவதாகவே இருக்கிறது.
சூதாடி
ஒரே அடியாய் பேசுகிறாயே, கொஞ்சம் இரு! உனக்கு ஐம்பதாயிரம் பிராங்க கொடுத்துவிட்டால் எனக்கு மீதி என்ன இருக்குமாம்.
*ஒன்றரை லட்சம் பிராங்க் உன்னிடம் மீதி இருக்குமே, அதை மறக்கலாமா நீ? அதோடு உன்னுடன் நான் இருப்பேன்-ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ இருப்பேன். உன்னிடம் இருக்கும் ஒன்றரை லட்சம் பிராங்கையும் இரண்டு மாதங்களில் செலவழித்து விடுவோம். நீயே பார். நான் ரொம்ப நல்ல பெண். எதையும் மறைக்காமல் முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்!"
“என்ன, யாவற்றையும் இரண்டே மாதங்களில் தீர்த்துவிடுவோம் என்றா சொல்கிறாய்."
'ஆமாம்! அது உன்னை அப்படியா திகைப்புறச் செய்கிறது. படுமோசமான அடிமை நீ. அம்மாதிரி வாழ்க்கையில் ஒரு பாதம் என்பது உன் முழு ஆயுளுக்கும் ஒப்பானதாயிற்றே! ஒரு மாதம்தான், அதன்பின் பிரளயமே வந்தால்தான் நமக்கு என்ன?
RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.50
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்






























