top of page
ராஜ ரகசியம், சித்த மருத்துவ நாவல், Raja Ragasiyam Siddha Maruthuva Novel, கா. செ. தமிழ்மணி, Thamizh Mani, Thamizhmani, Books,

ராஜ ரகசியம் - சித்த மருத்துவ நாவல்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH1489
₹150.00 Regular Price
₹139.50Sale Price

ஆசிரியர்: கா. செ. தமிழ்மணி    

வகை: ஆன்மிகம்    

பதிப்பகத்தார்: காக்கை பிரதிகள்    

பக்கங்கள்: 140    

மொழி: தமிழ்    

 

ராஜ ரகசியம், சித்த மருத்துவ நாவல், Raja Ragasiyam Siddha Maruthuva Novel, கா. செ. தமிழ்மணி, Thamizh Mani, Thamizhmani, Books, ஆன்மிகம், Aanmeegam, காக்கை பிரதிகள், Kaakkai Pirathigal, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    ஒரு தலை சிறந்த மருத்துவத்தின் ஒப்பற்ற பங்களிப்பை முழுவதும் அறியாத மூடர் கூட்டங்களாயையும் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் உயர்ந்த இவ் உலகின் எல்லா உயிர்களுக்கும் உயிர்வாழ ஆதாரமாயிருக்கும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் உண்மைத்தன்மையை போட்டுடைக்கும் செயலின் வெளிப்படை தன்மையே இந்த நூல். நம் தாய் மருத்துவமான சித்த மருத்துவத்திலிருந்து எடுக்கப்பட்டதே இன்று நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அனைத்து மருத்துவ முறைகளே.

    இவ் உலகின் எல்லா தரப்பு உயிர்களும் ஆரோக்கி வாழ்வு வாழ வழி வகை செய்ய நம் சித்தர் பெருமக்கள் தங்கள் வாழ் நாள் முழுவதையும் இவற்றிர்காக செலவு செய்து பல அறிவுசார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் வெற்றி கண்டு அந்த குறிப்புகளை ஓலைச்சுடிகளின் மூலமாக எழுதி வைத்த மருத்துவத்தை கால மாற்றத்தாலும் கண்ட பிளவுகளாலும் இட பெயர்வுகளாலும் பல பிரிவுகளாலாக பிரிந்த மக்கள் கூட்டம் உயர்ந்த, தாழ்ந்த, மேழ், கீழ், இனம், மொழி என்று முட்டாள் தனமாக செயல்களில் ஈடுப்பட்டு மனிதநேயத்தை, மாண்பை, அறத்தை இழந்து புத்தி மங்கி மறைத்து ஒலித்து திரித்து அழித்து செய்த செயல்களின் விலையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

    - ஆசிரியர்

     

    உலகின் மூத்த மொழியான தமிழில்தான் பாரம்பரிய மருத்துவ முறை என்பது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சைனா போன்ற நிறைய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறையிலான மருத்துவ முறைகள் கையாளப்பட்டு இருக்கலாம். ஆனால் சற்று ஆய்வு பூர்வமாக வாசிக்க முற்படுகையில் நமக்கு ஒன்று புரிகிறது. உலகில் உள்ள அத்தனை பாரம்பரிய மருத்துவ முறைகளும் நமது தமிழ்நாட்டில் இருந்துதான் சென்றிருக்கிறது என்ற உண்மை. ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய முடியாத அல்லது கண்டுபிடிக்க முடியாத பல நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவமான தமிழ் மருத்துவம் தான் இன்று வரை மக்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருத்துவம் பார்க்கும் முறை என்பது நமது குடும்பத்தில் இன்றும் இருக்கிறது. சாதாரண வயிற்று வலி முதல் மஞ்சள்காமாலை வரை இன்றளவும் நமக்கு அருகிலேயே உள்ள தாவரங்கள் அல்லது உணவு பொருட்கள் என எல்லாவற்றிலும் நமது தமிழ் பாரம்பரிய மருத்துவ முறை இருந்து வருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதை அடிப்படையாகக் கொண்டு சித்த மருத்துவ குறிப்புகள் என்கிற பெயரில் நேரடியாக பல நூல்கள் வந்திருக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர் முத்துநாகு அவர்களின் சுளுந்தி என்கிற நாவல்தான் முழுக்க முழுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவ முறைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்று நான் கருதுகிறேன். நான் அறிந்தவரையில் இதுவரை மருத்துவ முறைகளை கையாண்டு நாவல்கள் நான் வாசித்ததில்லை. அதற்கு அடுத்தபடியாக இப்பொழுது தோழர் தமிழ் மணி அவர்களின் ராஜ ரகசியம் என்கிற நாவல் தமிழ் பாரம்பரிய மருத்துவ முறைகளை கையாண்டு எழுதப்பட்டதாக கருதுகிறேன். தோழர் முத்துமணி அவர்களின் சித்தப்பா ஒரு சித்த மருத்துவர். அவரிடம் பெற்ற தகவல்கள் அவர் அருகில் இருந்து பார்த்த சித்தமருத்துவ வைத்தியமுறைகள் என எல்லாவற்றையும் கொடுத்து தனது சித்தப்பாவின் உதவியுடன் இந்த நூலை வெளியிட்டு இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் என்னிடம் வாழ்த்துரை கேட்டபோது சற்று பதட்டமாக தான் இருந்தது. ஒரு நூலை வாசிக்காமல் எப்படி வாழ்த்துறையோ அல்லது அணிந்துரையை கொடுப்பது என்ற பயம் அது. ஆனால் சில பக்கங்களை நான் பார்த்தேன். நிறைய செய்திகளை தோழர் தமிழ்மணி அவர்களும் என்னிடம் பேசினார். அதிலிருந்து நான் தெரிந்துகொண்டது ஒன்றே ஒன்றுதான், இது முழுக்க முழுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவ முறைகளுடன் கையாளப்பட்டிருக்கும் நாவல் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

    - எழுத்தாளர் பிறைமதி குப்புசாமி அவர்களின் வாழ்த்துறையிலிருந்து…

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page