top of page
அகப்பொருள் விளக்கம்

அகப்பொருள் விளக்கம்

SKU: PBH1360
₹180.00 Regular Price
₹167.40Sale Price

ஆசிரியர்: நாற்கவிராசநம்பி 

வகை: இலக்கியம் 

பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம் 

மொழி: தமிழ் 

 

அகப்பொருள் விளக்கம், Agapporul Vilakkam, நாற்கவிராசநம்பி, Naarkaviraasanampi Books, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, இலக்கியம், Ilakkiyam, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    அமிழ்தினும் இனிய தமிழ்மொழி உலகத் தொன்மொழி. பல மொழிகளின் தாய்மொழி. உலக மொழிகளுக்கெல்லாம் ஊற்றுநீர் போன்றது. உலக வழக்கு, செய்யுள் வழக்கு என இரு நிலைப்பட்டது. அது உலகமளந்த உயரமுடையது. அது இலக்கிய இலக்கண முடையது. தமிழில் கிடைத்திருக்கும் மிகப் பழைமையான நூல் தொல்காப்பியம். அதுவும் கவிதை நடையிலமைந்த இலக்கண நூல். தொல்காப்பியம் பொருளதி காரத்தில் சொன்ன அகத்திணையியல் என்னும் ஓர் இயலையே தனிநூலாகக் கொண்டது. அகப்பொருள் விளக்கம் என்னும் இந்த நூல், நாற்கவிராச நம்பி என்பார் எழுதியது. இன்பமாகிய ஒழுக்கத்தின் இலக்கணம் உணர்த்துவது. 252 நூற்பாக்களைக் கொண்டது.12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. நூலாசிரியர் நாற்கவிராச நம்பி என்பவர். அவர் முத்தமிழ் துறை போய வித்தகர் உய்யவந்தாரின் திருமகன். நம்பி என்னும் இயற்பெயரினர். சமண நெறியாளர். இந்நூற்கு ஸ்ரீமாந் பொ. பாண்டித்துரைத் தேவரவர்களால் பரிசோதிக்கப்பெற்ற பழைய உரையொன்று உள்ளது. வேறு மொழிகளில் காணக்கிடைக்காத இந்த நூல் தமிழுக்கென அமைந்த பொருள் நூல். இந்த நூலை அரிதின் முயன்று சிறப்பாகப் பதிப்பித்து வெளிக் கொணர்ந்துள்ளார். அவருடைய அரும்பணியால் கிடைக்கப்பெற்ற இந்த நூல் தமிழர்களின் தவப்பேறாய் அமைந்துள்ளது. தமிழ்மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய நூல்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page