top of page
கடல்புரத்தில்

கடல்புரத்தில்

Rating is 0.0 out of five stars based on reviews
SKU: PBH463
₹120.00 Regular Price
₹111.60Sale Price

ஆசிரியர்: வண்ணநிலவன். 

வகை: நாவல். 

பதிப்பகத்தார்: நற்றிணை.  

மொழி: தமிழ்.  

 

Kadalpurathil, Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், 'இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது' என்று தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, 'இவனும் ஏதோ சொல்லுகிறானே' என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப் போயிருக்கிறது. எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து. அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, 'எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம்' என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. நானும் எழுதுகிறவர்களில் ஒருத்தனென்று ஆகிப்போனதால், இலக்கியத்தைப் பற்றி மனம்விட்டுப் பேசுகிறேன். கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது; உண்மையோடு நெருங்கிய சம்பந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய் சொல்லமாட்டான். கலைக்குப் பொய் ஆகாது. இந்தக் கதையைப் பற்றி நான் சொல்லவேணுமே? இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு. மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனதை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது 'அன்பு வழி’யைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.

    ▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page