top of page
1984, பொய்த்தேவு விலங்குப் பண்ணை, நாகம்மாள், 1984 Poithevu VilanguPannai Naagammal, க.நா.சு, ஜார்ஜ் ஆர்வெல், ஆர்.ஷண்முகசுந்த

1984 பொய்த்தேவு விலங்குப்-பண்ணை நாகம்மாள் 1984 Poithevu VilanguPannai Naagammal

SKU: PBH1855
₹250.00Price

📚 தமிழின் சிறந்த கிளாசிக் நாவல்கள்

📖 688 பக்கங்கள் கொண்ட சிறப்பு மிக்க படைப்புகள்
💰 Offer Price: ₹250 மட்டும்
⏳ Pre-Orders Close: 16 April 2026
🚚 Dispatch Starts: 10 May 2026

 

1984, பொய்த்தேவு விலங்குப் பண்ணை, நாகம்மாள், 1984 Poithevu VilanguPannai Naagammal, க.நா.சு, ஜார்ஜ் ஆர்வெல், ஆர்.ஷண்முகசுந்தரம், Ka.Na.Su Books, மொழிபெயர்ப்பு, நாவல், Mozhipeyarppu, Novel, நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam Books, Buy Tamil Books Online, Online Books, Tamil Books, Online Tamil Book Store

Quantity
  • PRODUCT DESCRIPTION

    பொய்த் தேவு

    சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.

     

    நாகம்மாள்

    நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள்

    - பெருமாள்முருகன்

     

    விலங்குப் பண்ணை

    மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும் இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள் நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள் மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை

     

     1984

    ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார் ஜார்ஜ்.

  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.50

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page